சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்லாது சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்றையதினம் எதிர்க்கட்சிதலைவர் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுகாதார அமைச்சின் அதிகாரியொருவரும் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளர்.
”முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதரா அமைச்சுக்கு சொந்தமான இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை அமைச்சரின் குடும்ப உறவினர்கள் தற்போது வரை பயன்படுத்தி வருவதாக” குறித்த அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ”அரச அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால் அவருக்கான அனைத்து சலுகைகளும் உடனடியாக இரத்து செய்யப்படும் என்றும் ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு ஏன் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருவதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.