உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள செர்னிஹிவ் நகரிலுள்ள 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து இன்று 783 ஆவது நாளாகவும் நீடித்து வருகிறது.
இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் செர்னிகிவ் மாகாணம் மீது ரஷ்யா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், 8 பேர் உயிரிழந்துள்ளடன், மேலும், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கருகே அமைந்துள்ள செர்னிகிவ் மீது இன்று காலை குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.