பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
வெள்ளம், மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளினால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வடமேற்கு பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் அந்த மாகாணத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த அனர்த்தம் காரணமாக வடமேற்கு பாகிஸ்தானில் 1370 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.