சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுற்றாடல் அழிவு தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் பொலிஸ் மா அதிபர் அந்த தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி ஆறுகளின் கரையோரங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சட்டவிரோத தொழிற்சாலைகளால் ஏற்படும் ஒலி மாசுபாடு வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றாடல் பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட பணியகத்தின் 1997 அவசர இலக்கமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 1981 அவசர இலக்கமும் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்னிலையில் உங்கள் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.