7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்துடன் ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது என அச்சபை தெரிவித்துள்ளது
மேலும் ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

















