ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக அதன் உறுப்பினர்களால் நேற்று கலந்துரையாடப்பட்ட போதே இந்ந விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சியின் குழுவொன்று, நிர்வாக சபைக் கூட்டத்தை கூட்டி, பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.
அதன்படி, பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.
இதையடுத்து, இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது.
எனினும், இந்நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தரப்புடன் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தேர்தல் ஆணைக்குழு நேற்று கூடியிருந்தது.
இதன்போது, நீதிமன்றத்தின் ஊடாகவே கட்சியின் உள்ளக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.