தமிழ் மக்கள் கூட்டணியினரால் நேற்றைய தினம்‘ Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka ‘என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
நல்லூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.