சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் ”சமூக பொலிஸ் குழுக்களை நியமிப்பதன் உண்மையான நோக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்களை ஒன்று சேர்ப்பதாகும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன், இந்த சமூக பொலிஸ் குழுக்களை ஸ்தாபிப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதரவை கிராம மட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல குழுவை அமைக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், இலங்கையில் உள்ள 14,022 கிராம அதிகாரிகளும் இந்த குழு முறையை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.