தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 இலட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர்களில் 1,600 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 வீதம் அதிகமாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரேசில் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.