இஸ்லாமியர்கள் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ராஜஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ”காங்கிரஸ் கட்சி பொது மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்குவிநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி” இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.