காசாவில், அண்மையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில், 18 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலானது கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய வான் வழி தாக்குதலில், காசா பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த கட்டிடம் சேதமடைந்தது.
குறித்த தாக்குதலில் அக்கட்டிடத்தில் தங்கியிருந்த 18 குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில், 34,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் கூடுதல் நிதியை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.