யாழ்ப்பாணம் ஆறுகால் மட சந்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முச்சக்கர வண்டியை மோதிய பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.