கென்யாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 32 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும், கரையோரங்களில் வசித்துவந்த 2 இலட்சம் மக்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கென்ய தலைநகர் நைரோபி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீர் பல்வேறு பகுதிகளில் புகுந்தமையால், குடியிருப்பு கட்டடங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் மூழ்கியுள்ளன.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் இதனால் சேதமாகியுள்ளன.
வெள்ள அனர்த்தத்தினால் போக்குவரத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் இதனால் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை, மற்றும் வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாக கென்யாவின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவகின்றமையும் குறிப்பிடத்தக்கது.