தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோட்டார் சைக்கிளில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் வரும் மே மாதம் 20 ஆம் திகதி 5 ஆம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பா. ஜ.க சார்பில் பொது வேட்பாளராக அமேதி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள ஸ்மிருதி இரானி நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராகுல்காந்தியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.