ஏமன் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான எம்.கியூ.-9 ரீப்பர் வகை ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக் கிளர்ச்சிப் படை அறிவித்துள்ளது.
காசாவில் நடந்து வரும் போர் சூழலில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் 3-வது ஆளில்லா விமானம் இது எனக்குறிப்பிடப்படுகின்றது.
எனினும் தமது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.