நாட்டில் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப் பிடிப்பதற்குச் செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், அவற்றில் புகைபிடித்தல் முக்கிய காரணங்களில் ஒன்றெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் புகைப்பிடிப்பதனால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் வருடமொன்றுக்கு 2300 சிகரெட் வடிகட்டிகள் சுற்றுச்சூழலுக்கு வெளிவிடப்படுவதாகவும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.