இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாக மாறாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.