முல்லைத்தீவு, நாயாறு கடற்பிராந்தியத்தில் காணாமற் போன நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நாயாறு கடற்பிராந்தியத்தில் ஐவர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று மாலை நீராட சென்றிருந்தனர்.
இதன்போது இளைஞர் ஒருவர் கடலில் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞனும் நீரில் மூழ்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நாயாறு கடற் படையினரின் உதவியுடன் இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மற்றைய இளைஞனை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியானது நீராடுவதற்கு மிகவும் ஆபத்தான பகுதி என அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் செயற்படுவதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.