”பொதுஜன பெரமுனவின் ஆதரவு இன்றி எந்தவொரு வேட்பாளரும் தேர்தலில் வெற்றியடைய முடியாது” என ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்
அளுத்கம பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக எவரும் குழப்பமடையதேவையில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது பலம்பொருந்திய ஒருகட்சியாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு இன்றி எந்தவொரு வேட்பாளரும் தேர்தலில் வெற்றியடைய முடியாது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக முன்னிலையாகின்றவர் தேர்தலில் அமோக வெற்றியீட்டுவார்.
எனவே பொருத்தமான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். விரைவில் ஜனாதிபதி வேட்பாளரை நாம் களமிறக்குவோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.