நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி நாளை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் முன்வைத்திருந்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.