நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட. ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் தற்போதைய விலை 440 ரூபாவாகும்.
அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் விலை 386 ரூபாவாகும்.
அத்துடன் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தின் பிரகாரம் 92 ஒக்டேன் லீற்றர் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை. என்றும் இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 371 ரூபாவாகவும், வெள்ளை டீசல் லீற்றர் 363 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.