உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது பிரச்சினைகளோ இதுவரை பதிவாகவில்லை என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனைத் தெரிவித்தார்.