”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியென” என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” விரைவில் இந்த நாட்டில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனித்து போட்டியிட்டாலும் கூட்டணியாக போட்டியிட்டாலும் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்.
யானை மொட்டு கூட்டணியிலேயே இம்முறை ரணில்விக்ரமசிங்கவும் ராஜபக்ஷ தரப்பினரும் மே தின கூட்டங்களையும் பேரணிகளையும். முன்னெடுத்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியினர் எவ்வாறான மாறுவேடசுற்றில்வந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியடைவது உறுதி” இவ்வாறு அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.