கல்விப் பொதுத்தராதர உயர்தர பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு மொத்தமாக 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பேர் தோற்றியிருந்தனர்.
இவற்றில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65 ஆயிரத்து 531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.
இந்த வருடம் 4 இலட்சத்து 59, ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இதன்படி மூவாயிரத்து 527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.