நாட்டில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில், ஒரு கிலோ எலுமிச்சை 1,200 ரூபாயாகவும் ஒரு கிலோ இஞ்சி 2,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பேலியகொடை மெனிங் மரக்கறி சந்தையில் இன்று ளஒரு கிலோ பச்சை மிளகாய் 100 ரூபாயாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயாகவும் ஒரு கிலோ கரட் 150 ரூபாயாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 200 ரூபாயாகவும் இங்கு விற்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ போஞ்சி 200 ரூபாயாக இங்கு விற்கப்பட்டதோடு, ஒரு கிலோ லீக்ஸ் 150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
அத்தோடு, ஒரு கிலோ முட்டைக்கோஸ் 100 ரூபாயாகவும் ஒரு கிலோ பீட்ரூட் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒரு கிலோ வெண்டைக்காய் 150 ரூபாயாகவும் ஒரு கிலோ பூசணிக்காய் 80 ரூபாயாகவும் ஒரு கிலோ முள்ளங்கி 80 ரூபாயாகவும் ஒரு கிலோ வெங்காயத்தாள் 150 ரூபாயாகவும் ஒரு கிலோ எலுமிச்சை 1,200 ரூபாயாகவும் ஒரு கிலோ இஞ்சி 2,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.