13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவேன் என வெறும் வாய் வார்த்தைகளால் கூறாது, அதனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வலியுறுத்தினார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னர் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.