சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுப்பப்பட்டது.
இதன்போது ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அரச அதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.