இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மக்கள்தொகை குறைவின் சதவீதம் 0.6 வீதம் என தெரிவித்துள்ளார்.
இதனால் பெண்களின் தொகை எழுபதாயிரமும், ஆண்களின் தொகை எழுபத்து நான்காயிரமும் குறைந்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதோடு, இறப்பு எண்ணிக்கையும் 1447 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளது.