நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மே மாதம் ஆகும்போது முட்டையின் விலை குறைவடைய வேண்டும்.
ஆனால், ஒரு குழுவினர் இருந்துக் கொண்டு இந்தவிடயத்தில் ஏகாதிபத்தியமாக செயற்பட்டு வருகின்றனர்.
அவர்கள் செயற்கையாக முட்டைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, முட்டையின் விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றனர்.
நாம் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செயற்வதை நிறுத்தியுள்ளமையால்தான், இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
இந்த நிலையில், மீண்டும் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்தால், முட்டைகளின் விலையைக் குறைக்க முடியும் என நாம் நம்புகிறோம்.
இதற்கான அனுமதியை விரைவில் நாம் வழங்குவோம். இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டைகள் இறக்குமதி செய்த பின்னர், குறைந்த விலையில், முட்டைகளை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாடசாலை மாணவர்களுக்கு முட்டை வழங்கும் செயற்பாட்டுக்காக, எமக்கு தற்போது பெருமளவு முட்டைகள் தேவைப்படுகின்றன.
இதற்காக நாம் விரைவிலேயே இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வோம்” என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.