நாட்டில் நெருக்கடியான காலப்பகுதியில் பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து பெருமளவிலான எரிபொருள் காணாமல் போயுள்ளமை வலுசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வலுசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் நாலக்க பண்டார கோட்டேகொட, இந்தக் குழுவில் முன்னிலையான இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியிலேயே பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து ஒரு தொகை எரிபொருள் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் தளமொன்றை உருவாக்குவது தொடர்பான முழுமையான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட விலையை விட அதிக விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, இந்த திறந்த இலத்திரனியல் தளம் அதனைத் தடுப்பதற்கான ஒரு நடைமுறைத் தீர்வாக அமையும்” இவ்வாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.