முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அலைவரிசையில் நேரலை ஒளிபரப்புக்கு நேரம் ஒதுக்கியதன் பின்னர் அது தொடர்புடைய தொகையை செலுத்தத் தவறியமைக்காகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.