ஆப்கானிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்” ஏப்ரல் மாதத்தின் இறுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் உருவானது.
இவ்வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் முழுமையான சேத விபரம் தெரிய வரும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.