நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் நாம் கோரிக்கை விடுத்துவருகின்றோம்.
ஆளுந்தரப்பு எதிர்த்தரப்பு பாகுபாடின்றியே நாம் இந்த விடயத்தில் செயற்படுகின்றோம். இரண்டு வருடங்களாக முடங்கியிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க வரவு செலவுத்திட்டம் வழிவகை செய்துள்ளது. அதிகாரப்பரவலாக்கப்பட்ட நிதியுதவி திட்டங்கள் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.















