இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லுவுக்கும் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.
இதில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துதல் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இருதரப்பும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தேசிய செயற்குழு உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், வசந்த சமரசிங்க மற்றும் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.