பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று தொடக்கம் மேலும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 14வது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தில் 15 சதவீத வெட்டு மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை அவர்கள் தொடர்ச்சியான முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.