மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள
பணிப்புறக்கணிப்பு இன்று வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சீருடை கொடுப்பனவுடன் ஒப்பிடும் போது ஏனைய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படாமை மற்றும் குறிப்பிட்ட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிடும் போது 15 குழுக்கள் புறக்கணிக்கப்பட்டமையினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமத்திய மாகாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் சுகாதாரத் துறையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.