இலங்கையிலிருந்து விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இதனைக் தெரிவித்தார்.
இதன்படி, வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஒருவர் அடங்களான தூதுக்குழுவை ரஷ்யாவிற்கு செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா – யுக்ரேன் யுத்தத்திற்கு சட்டவிரோதமாக சென்ற 16 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த யுத்தத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பாக 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.