மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி அருங்காட்சியகம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் கல்முனையில் “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவையாற்றிய சிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















