இலங்கை கடற்படையின் 3,146 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கடற்படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஒப்புதலுடன், 3,146 பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வருடங்களாக நீடித்த பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் வெற்றியடையச் செய்வதற்கு ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் வீரவீரர்கள் உயிர் தியாகம் செய்து ஈடுசெய்ய முடியாத பங்களிப்பை ஆற்றியதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.