நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான பிடியாணை கோரிக்கைக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவாவ் காலண்ட், ஹமாஸ் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலியத் தலைவர்களும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த நடவடிக்கையை யூத விரோதம் என்றும் விமர்சித்துள்ளனர்.