வியட்நாமின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான து லாம், நாட்டின் புதிய அதிபராக வியட்நாம் நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி து லாமின் பெயரை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்ததையடுத்து, அவருக்கு ஆதரவு அளிக்க ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது
வியட்நாமில் அடிப்படைச் சுதந்திரங்கள் நசுக்கப்பட்டதாக உரிமைக் குழுக்கள் எழுந்த காலத்தில் அவர் பொலிஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
மேலும் 66 வயதான து லாம் அதிபராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் இரண்டு மாதங்களாக நிலவி வந்த கடும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.