”சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இழந்த வருமானத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 50 கோடி ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியமை வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகும். இலங்கையின் நிதிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்த மிக முக்கியமான தீர்மானம் இதுவாகும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.