ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 12 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்பியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் எவரும் முன்வராத நிலையில் தனியாக இந்த நாட்டைப் பொறுப்பேற்றார்.
பொருளாதார வீழ்ச்சிக்கு யாரையும் குறைகூறாமல் இந்த நாட்டைப் பொறுப்பேற்றார்.
வங்குரோத்து நிலையில் இருந்து இன்று நாடு விடுவிக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாதமளவில் வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடும் என்ற நம்பிக்கை உள்ளது.
சித்திரைப் புதுவருட கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதேபோல் வெசாக் உற்சவத்திற்கும் மக்கள் ஆரவாராமாகத் தயாராகி வருகின்றனர்.
கடந்த அண்மைய வருடங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வெசாக் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் இருந்தனர்.
ஆனால் இம்முறை கொண்டாட்டத்திற்கான சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.