விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை தர்மராஜா பிரிவேனா விகாரையில் இன்று அரச அரச வெசாக் விழா இடம்பெற்றது. மற்றவர்கள் செய்ததை அன்றி தான் செய்தவற்றைப் பற்றி கவனம் செலுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வெசாக் விழா நடைபெறுகிறது.
குறித்த நிகழ்வில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று உலகம் மூடநம்பிக்கையிலிருந்து விலகிச் செல்கிறது. அறிவியலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தால், பல நூற்றாண்டுகளாக நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறி வருகிறது.
மருத்துவத் துறையும் தொழில்நுட்பத் துறையும் வளர்ச்சியடைந்துள்ளன.
அதேநேரம், வானவியல் பற்றிய புதிய அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட அறிவின் வளர்ச்சியுடன், நாம் இன்னும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அதன் உண்மையான அர்த்தத்தை அறிந்தவர்களுக்கும் இது ஒரு பிரச்சினையல்ல. தேரவாத பௌத்தத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்“ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.