பாகிஸ்தானில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.
இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.
இதேவேளை பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறதுடன் நாட்டின் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்தன
மேலும் பாகிஸ்தான் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.