நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் தியத்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று நான்கு இடங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது
இதனால் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை பயன்படுத்துவோருக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சாகர தயாரத்ன தெரிவித்தார்.
மேலும் தியத்தலாவ இராணுவம், தியத்தலாவ பொலிஸார், ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை, ஹப்புத்தளை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச செயலகம் என்பன இணைந்து இந்த வீதியில் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.