காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் மகேந்திரகாரில் நேற்றைய தினம் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்தியா’ கூட்டணி, வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக இருக்கிறது. அரியானாவில் ஒவ்வொருவரும் ‘ராம் ராம்’ என்று சொல்கிறார்கள்.
ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொல்பவர்களை கைது செய்து விடும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பையும் நிராகரித்தது.
காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகர் ஒருவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலுக்கு பூட்டு போட விரும்புவதாக தெரிவித்தார். மக்களின் பக்தியை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.