நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணுகின்றவர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு புலனாய்வு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கு பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் இந்தக் குழு விசாரணைகளை முன்னெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.