தமிழகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் உள்ள பிரதான அருவியின் கரைகளில் பாதுகாப்புப் பணிகள் நடைபெறுவதால் குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை 7வது நாளாகத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.