நாட்டில் ஜனாதிபதி தேர்தல் முதலாவதாக நடைபெறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் கூட்டணிகள் மற்றும் ரணில் செயற்பாடுகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அர்த்தமற்ற கருத்துக்களை பகிராமல் கிராமத்திற்கு சென்று வாக்குகளை சேகரிக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோர் தமது உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
தேர்தல் வேட்பாளர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் மக்கள் சேவைகளை தொடருமாறு மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பொதுஜன பெரமுன கட்சிக்குள் தொடர்ந்தும் குழப்பங்கள் நீடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.